சனி, 7 மார்ச், 2015

அறைதற்காலம்


அறைந்தது போக
எஞ்சியிருக்கும் இன்னொரு ஆணியையும்
அறைந்து விடுவதற்கு
காத்திருக்கிறார்கள் சிலுவையின் காலடியில்.
அறையப்பட்டு,
தூக்கி நிறுத்தப்பட்ட சிலுவையில்
பாதி உயிரோடும்
கைக்கெட்டாத் தொலைவிலுமாக
பார்த்துக்கொண்டே இருக்கிறேன் அவர்களை.

கையிலிருக்கும் இறுதி ஆணியை
அறைந்துவிடும் ஆர்வமிகுதியால்
செய்வதின்னதென புலப்படாமல்
தவமிருத்தல் தொடர்கிறது.

அவர்களது கையிலிருக்கும்
இறுதி ஆணியையும்
எனது விலா எலும்புகளின் இடுக்கில்
பெற்றுவிடுவதற்காக
எனது சிலுவையிலிருந்து
இறங்கிவரும் காலத்துக்காக
நானும்தான் காத்திருக்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக