சனி, 7 நவம்பர், 2015

வேதாளம்

இன்றைய எனது முகநூல் பதிவும், அதன் பின்னான குறிப்பும்.


 சஞ்சயனின் வேறொரு விசயம் தொடர்பான பதிவில் நண்பர் பத்மநாதன் "அவதூறு" அரசியல் பற்றிய விசயத்தைத் தொட்டார். அந்த உரையாடலில் நானும் கருத்துச் சொல்லப்போக..... தூங்கிக் கிடந்த வேதாளம் சோம்பல் முறிச்சு எழும்பீட்டுது. அதுதான் இது. 

//புலிகளுக்கு ஆதரவாக இருப்பதாக தம்மைக் காட்டிக் கொள்வதற்கு மற்றவர்கள்மீது அவதூறு செய்பவர்களைக்கூட நம்மால் விளங்கிக் கொள்ள முடியும். அவர்களின் பொருட்டு அதில் ஒரு துணிவு இருக்கும். நெஞ்சுக்கு நேராக வருவார்கள். மோதலாம், அடிபடலாம், கடிபடலாம், சேர்ந்து படம் பார்க்கப் போகலாம், கள்ளுக் குடிக்கலாம், கச்சேரி வைக்கலாம் ஆனால்.... தம்மை முற்போக்காளர்களாகவும், இலக்கியவாதிகளாகவும், பத்திரிக்கைக் காரர்களாகவும் படங் காட்டிக்கொண்டும், நல்ல பிள்ளையாட்டம் எல்லாருக்கும் நடித்துக் கொண்டும் இருக்கும் ஆணாதிக்க வக்கிரிகள் பெளசர் போன்ற கிருமிகளையிட்டுத்தான் நாம் கவனம் கொள்ள வேண்டி இருக்கின்றது நண்பா. ஆனால் இந்த பவுசர் போன்ற அயோக்கியர்களையும், வியாபாரிகளையும்தான் நம்ம ஐரோப்பிய தமிழ் இலக்கிய அம்மான்மார் நடுவீட்டுக்குள்ள தூக்கி இருத்தி வச்சிருக்கினம். சந்தர்ப்பம் பார்த்து பின்னால வச்சு இறுக்கிப்போட்டுப் போவானுகள் அப்பதான் நம்ம அம்மான்மாருக்கு பருப்பும் கருகப்பிலையும் விளங்கும். ஆனால் நான் விடுவதாக இல்லை. இந்தக் கிருமியை சந்திக்கும் அந்த முச்சந்தியை ஆவலோடு காத்திருக்கிறேன்.//

"40வது லண்டன் இலக்கியச் சந்திப்பில் தொடங்கிய இந்தப் பிரச்சனையை இன்னுமா இழுத்து வைத்துக் கொண்டிருக்கிறாய்" என்று பின் கதவால் வந்து கேள்வி எழுப்பும் நண்பர்களே!
அப்போதிருந்தே மொத்த இலக்கியச் சந்திப்பு ஆதரவாளர்களும், எதிர்ப்பாளர்களும், 41வது இலக்கியச் சந்திப்பை இலங்கைக்குக் கொண்டு செல்வதில் ஆதரவு காட்டியவர்களும், எதிர்ப்புக் காட்டியவர்களும், நாங்கள் நடுப்பக்கம் என றீல் ஓட்டியவர்களும் இதனை எமக்கும் பெளசருக்குகிடையிலான தனிப் பட்ட பிரச்சனையாகக் கயிறு திரிப்பதிலேயே முனைப்பாக இயங்கி வந்திருக்கிறீர்கள்.
40வது இலக்கியச் சந்திப்பின் ஏற்பாட்டாளரான பெளசருக்கும் எமக்குமிடையில் என்ன கொடுக்கல் வாங்கலா இருந்தது...? அல்லது பிஸினஸ் கூட்டாளிகளாக இருந்தோமா என்ன...?
இதுவரை நாங்கள் பெளசரைக் கண்ணாலும் கண்டதில்லை, எங்களையும் பெளசர் பார்த்ததில்லை.
ஆனால் இலங்கைக்கு இலக்கியச் சந்திப்பை எடுத்துச் சென்று நடத்தக் கூடாதென எல்லா வகையாலும் எதிப்புக்கள் காட்டியும், அவதூறுகள் கொட்டியும் திரிந்த கூட்டத்தாரோடு, 41வது இலக்கியச் சந்திப்புக்கு ஆதரவு காட்டியவர்கள் எலியும் பூனையுமாக, பாம்பும் கீரியுமாக இருந்து தண்டு தடி எடுத்தீர்கள்.
(பின்பு அதெல்லாம் முடிந்த கையோடு சகட்டுமேனிக்கு அவதூறைக் கொட்டிய அதே கூட்டத்தாரோடு எதுவுமே நடக்காததுபோல் "திண்டு குடித்து, படுத்தெழும்பினீர்கள், இப்போதும் ஆளையாள் முதுகு சொறிகிறீர்கள்" என்பது வேறு கதை. அது உங்கள் தேர்வு. அதற்குள் நாம் வரவில்லை)

அதே அந்த 41வது இலக்கியச் சந்திப்புக்கு ஆதரவு தெரிவிக்கப் போய்த்தான் பெளசரும் அவர்தம் கூட்டத்தாரும் எங்கள்மீது அவதூறுகள் கொட்டினார்கள். அதற்கெல்லாம் ஒருபடி மேலே போய் 40வது லண்டன் இலக்கியச் சந்திப்பின் ஏற்பாட்டாளரான பெளசர் பானுபாரதி குறித்து எழுதினார் "சோபாசக்திபோல் நானும் தன்னிலை விளக்கம் கொடுக்கவா வேண்டும்?" என்று. (கவனிக்க:- லண்டன் இலக்கியச் சந்திப்பின் ஏற்பாட்டாளர் எழுதியது) அப்படியானால் என்ன அர்த்தம்...? இதனைத்தான் அப்போதிருந்து நாம் பெளசரிடம் விளக்கத்தைக் கேட்டுக் கொண்டிருக்கிறோம். விளக்கம் கிடைக்காதவரை, அது எத்தனை காலமானாலும் விடாமல் கேட்டுக்கொண்டே இருப்போம் எனவும் சொல்லி வருகின்றோம்.
சிலவேளை லண்டன் இலக்கியச் சந்திப்பின் ஏற்பாட்டாளரான பெளசரிடம் விளக்கம் கேட்பதை விடுத்து, மொத்த இலக்கியச் சந்திப்புக் காரரிடமும் கேட்டிருக்க வேண்டுமோ என்னவோ...? பெளசருக்கு ஆதரவு தெரிவித்துக் கை தட்டிப் பாராட்டிய அதியுச்ச பெண்ணியவாதி லக்ஷ்மியும் இவ்வகைப் பதிவுக்கு சைலண்டாக இருந்தும், எமக்கெதிராக ஆளணி திரட்டியும், தனது கைக்கு எட்டிய பக்கங்களிலெல்லாம் பெளசசாட்சியம் எழுதியும் 40வது இலக்கியச் சந்திப்பின் ஏற்பாட்டாளர் பெளசரின் வக்கிரத்துக்குக் குடை பிடித்தார். எழுத்துப் பிழையிலேயே பெண்ணியத் திருத்தம் சொல்லிக் கூச்சலிடும் லக்ஷ்மியின் லட்சணம் இதுதான் என எமக்கு அடையாளம் காட்டினார்.

40வது இலக்கியச் சந்திப்பின் ஏற்பாட்டாளர் பெளசரின் அந்தப் பொன்னான பதிவுக்கான விளக்கத்தை நாம் கேட்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் 41வது இலங்கை இலக்கியச் சந்திப்புக்கு ஆதரவு தெரிவித்துக் கை தூக்கிய அத்தனைபேரும் நசிஞ்ச கள்ளனுக்க நக்கின கள்ளராகி விடுகிறார்கள். இப்ப தாங்கள் நடுச் செண்டராம்.

மேற்படி கேள்வியோடு நாம் விடை கிடைக்கப் பெறாமல் இருக்கிறோம். அதேவேளை அப்பப்போ 40வது இலக்கியச் சந்திப்பின் ஏற்பாட்டாளர் பெளசரை நோக்கி இந்த விளக்கத்தைக் கேட்டுக்கொண்டேதான் இருக்கிறோம். (அதற்கு வன்னியிலிருந்தொரு கொட்டையர் "இது குடும்பச் சண்டை" எனப் பதிவு போடுகிறாராம், அதற்கு ஐரோப்பிய, கனேடிய இலக்கியக் கொட்டையர் 27பேர் லைக் அடிச்சு ஆதரவு சொல்லுகினமாம்.)
(வீணாக வருகுது வாயில....)

இதனை மனதில் வைத்து கடந்த மூன்று இலக்கியச் சந்திப்பிலும் எப்படி நாம் கோணர் பண்ணப் பட்டோம் என்பதுவும், உயிர்மெய் வெளியீடுகளும், எமது படைப்புக்களும் கூட்டுச் சேர்ந்து எப்படி ஓரங்கட்டப் பட்டது என்பதையும் நாம் விளங்கிக் கொள்ளாத மொக்கர்களில்லை. (அதுசரி, இது இப்போது மட்டுமா இந்த இருட்டடிப்பும் ஓரங் கட்டலும் நடக்கிறது. நெடுங்காலமாக)

திரும்பத் திரும்ப இதை நீளம் நீளமாக எழுதிக் கொண்டிருக்க முடியாது. இப்போ என்னதான் சொல்ல வாறீங்கள் தோழர்களே!
40வது இலக்கியச் சந்திப்பின் ஏற்பாட்டாளர் பெளசரிடம் விளக்கம் கேட்க வேண்டாம் இலக்கியச் சந்திப்பே விளக்கம் தரும் என்கிறீர்களா...? சரி, தாங்கோ. எப்போ? அதுவரை கேட்டுக்கொண்டே இருக்கிறோம்.

உயிர்மெய் பதிப்பகத்தால் இனிவரும் ஒவ்வொரு தொகுப்புக்களின் பின் அட்டையிலும் இதனைக் கேட்டு பதிவு செய்வதாக உள்ளோம் என்பதையும் வருத்தத்துடன் சொல்லிக் கொள்கிறோம்.

பிற்குறிப்பு: (40வது இலக்கியச் சந்திப்பின் ஏற்பாட்டாளர் பெளசரின் இந்தப் படு பிற்போக்கான வக்கிரத்துக்கு அவர் விளக்கம் தர வேண்டும், அல்லது அவரைக் காப்பாற்ற முயற்சி செய்யும் இலக்கியச் சந்திப்பு விளக்கம் தர வேண்டும். அதல்லாமல் உண்மையாகவே இலக்கியச் சந்திப்பு நிகழ்ச்சி நிரல்களில் இப்போதெல்லாம் "பெண்ணியம், பெண் விடுதலை" என்ற தலையங்கங்களைக் காணும்போது கூச்சமாக இருக்கிறது. எப்படி வெட்கமில்லாமல்...?)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக