வியாழன், 17 நவம்பர், 2016

சூடு -1988


நெஞ்சைச் சுடுகிறதாம்
கறுப்பு என்றிவர்கள்
நையாண்டி பண்ணும்போது
நெஞ்சைச் சுடுகிறதாம்.

எந்த வட்டாரம்?
எந்தக் கோயில்?
எத்தனையாம் திருவிழா?


ஓ.... அடையாளம் கண்டாச்சு
இவன் இன்ன சாதி.

இன்னமும்
அழிந்துபோகாத இவைகள் மட்டும்
எதனைச் சுடுகிறது
இவைகள் சுடவில்லையெனில்
கறுப்பு என்பதும் சுடாது.
கறுப்பு சுடுமானால்
நிச்சயம் இவைகளும் சுடும்.

இங்கு கழுவினால் காசு.
தீட்டற்ற மதிப்பு.

எப்பிடி உரசி உரசிக் கழுவினாலும்
உந்தக் கறுப்புமட்டும்
போறதாத் தெரியேல்ல.

காவோலை சரசரத்து
தெரு நடந்த காலத்திலும்
கக்கத்தில் சால்வை வைத்து
சிரம் கவிழ்ந்த காலத்திலும்
வேரூன்றி இருந்துகொண்டு கழுவினால்
கறுப்பு எப்படிப் போகும்?

சீழ் வடியும் புண்ணுக்கு
சுடுபுழுதி மருந்தாகுமோ....?

சீச்சீ....

காவோலைச் சரசரப்பும்
கக்கத்துச் சால்வைத் துண்டும்
உழுத்தல்க் கொல்லைக் கதவும் சுடாதவரை
கறுப்பும் சுடாது.


நன்றி: சுவடுகள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக