புதன், 23 ஜூலை, 2014

ஒரு மானுடனுக்காக!

விமலேஸ்வரன் நினைவாக (ஜூலை 1993இல்)

கால்மாட்டிலும் தலைமாட்டிலும்
வெட்கமும் வேதனையும்
வந்தமர்ந்து கொண்டு
அவனது
மரணத்தின் வாழ்தலைப் பற்றி
விவாதித்துக் கொண்டிருக்கும்.

இராக்காலம் பாதியும்
பாதியில் பாதியும் வராத
பனிப்புல இருப்பில்
அதில் பாதியாய் கிடைக்கும்
இமைத் தேற்றமும் இல்லையென்றாகிவிடும்.

தட்டிக்கொட்டி
சேர்த்த சில்லறைகளால்
கிடைத்த
வளாகசாலையின் மண்டித் தேநீர்.
மிடறுக் கணக்காய்
பங்குபோட்டுக் குடித்த
காலங்கள் வந்து துரத்துகிறது.

செவ்வாய், 22 ஜூலை, 2014

கோணல் முகங்கள்


வண்ணத்துப் பூச்சிகளின் கனவுகளில்
அப்பப்போ வந்துபோகும்
சிறு பாத்திரம் எனது

நம்பிக்கை மீதான நம்பிக்கையில்

ஓசை-10 (ஐப்பசி-1992) 


இடைவிடாத பயணம்
இன்றுவரை வெட்டவெளியில்.
அடிவானின் கீழ்
அமிழ்ந்திக்கிடக்கும்
எனது கிராமம்
இன்னும்
மேலெழவில்லை
நம்பிக்கையும் தேயவில்லை.
களைத்துப்போன கால்களுக்கு
ஆறுதல் கூறி
பயணம் தொடர்கிறது.

இமைமூட....

மனிதம் (நவம்பர் 1994)


புறாக்களும் கிளிகளும்
பிணங்களில் குந்தியிருந்து
கடித்துக் கடித்து தின்றன

எனது கிராமம்



சுவடுகள்-60 (நவம்பர் 1994)


பனிப்போர்வையுள்
நடுங்கிக் கிடந்த
எனது
பலகை அறையுள்
இன்னொரு போர்வையுள் நான்
கண்ணயர்ந்த சற்று நேரம்

செத்து நடந்த நான்

சுவடுகள்-77 (ஜனவரி 1997) 

வண்டிற் பாதையால்
வளைந்தோடும் மழை நீரில்
அடையும் கஞ்சல்போல்
எனது கனவுகள்
அள்ளுண்டு சென்றன
ஒரு
இரவு வேளையில்

மீட்பு

-தமயந்தி- (15.12.1993)



புயல் துரத்த
புயலோடு
அள்ளுண்டோடி வரும்
புழுதிப் படை துரத்த
கடல் துரத்த
கருமூஞ்சி
கொப்பழித்தித்துப் புரளும்
முகில் துரத்த
இருள் துரத்த
இருட்டாள்கையில்
விழிகள் தணல் சீற
ஆந்தை துரத்த
வனம் துரத்த
வளமாய்க் குடல் தின்ன
வனவஞ்சக
நரி துரத்த
பேய் துரத்த
பேய்க்குப் பலிதேடி
பேயாய் அலையும்
பேயின் புதல்வர் துரத்த

ஞாயிறு, 20 ஜூலை, 2014

கூழ்முட்டை ஓவியம்

(சுவடுகள், கார்த்திகை-1989) 


பல வர்ணங்கள்
பல வடிவங்கள்
நிறையத் தலைகள்
நிறையவே கை கால்கள்

வயல் - மே 1993

(சுவடுகள் இதழ்-53, மார்கழி 93)

போர் முடிந்துவிட்டது.
தேசப் பிரதான சாலைகளின்
ஒவ்வொரு திருப்பத்திலும்
நூதன சாலைகள்.

சனி, 19 ஜூலை, 2014

உரத்த இரவுகள் (1985-86)

(15.11.86இல் வெளிவந்த தொகுப்பு- சில கவிதைகள்
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற புகைப்படக் கண்காட்சியன்று வெளியிடப் பட்டது

முகப்போவியம்: நிலாந்தன் 


பிலாத்துக்களே! 

சிலுவைகள் இல்லாமலேயே
மரணித்துப்போன
இந்த
யேசுநாதர்களுக்கு
தண்டனை விதித்த
பிலாத்துக்களே!

புதன், 16 ஜூலை, 2014

ஏகலைவன் கூத்து


அண்ணாவியார் ச.மிக்கேல்தாஸ் எண்ணங்களிலிருந்து....  


நாட்டுப்புறக் கலைகளில் சமூகத்தின் மரபுகள், மதச்சடங்குகள், கலாச்சார வழக்குகள் பின்னிப் பிணைந்து வாழ்வியலின் நெறிமுறைகள் வகுக்கப் பட்டுள்ளமையினால், நாட்டார் பாடல்கள், நாட்டுக்கூத்துக்கள், வடபாங்கு, தென்பாங்கு எனும் வடிவத்துடன் மக்கள் பாடலாகவும், அந்தத்தப் பகுதி மண்ணுடன் வளர்ந்து வளம் பெற்றவையாகவும் உயிர்ப்புடன் விளங்குகின்றன.



எம்மிடமிருந்து தொலைந்தவர்கள் நினைவாக!

-தமயந்தி- (1987 இந்தியா)  


நமது சூரியன்
உங்களோடுதான் மரணித்தது.

நீங்கள் வருக
உங்களோடு
நமது சூரியனும் எழுக.

நமது
சூரியன் வருக
சூரியனோடு நீங்களும் எழுக.

வீதிகள் திருத்தப்படலாம்

ஐப்பசி 1996 சுவடுகள்-72


நாம் நடந்த நமது வீதிகள்.
நம்மைச் சுமந்த நமது வீதிகள்.
நமது கைகளின்
முரட்டுப் பிடியினாலேயே
சிதைந்தன, அழிந்தன.

மெளனங்களும் எங்கள் கல்லறைகளும்

-தமயந்தி-  (02-05.1994)

(சபாலிங்கம் நினைவுகளைத் தாங்கி 1994ஜூலையில் சபாலிங்கம் நண்பர்கள் வட்டத்தால் வெளியிடப்பட்ட "ஒரு படுகொலையின் மொழி" தொகுப்பிலிருந்து.) 


ஒரு கணம்
அதிர்ந்து நடுங்கி
நின்றதோரிடத்தே அசையாது
சார்சல்ஸ் நகரத்தின்
சரிந்த வானக்கரையில் சூரியன்.

பெரிய தினமொன்றின்
பகற் பொழுதில் நனைந்ததொரு
ஆசிய மனிதனின் இரத்தத்தால்
சார்சல்ஸ் நகரத்தின் கூரைகள்.

வெடிக்கவும்
மனிதத்தின் கதை
முடிக்கவும் மட்டுமே தெரிந்த
எங்கள் தேசத்து யந்திரங்களிலொன்று
அலைகளையும், மலைகளையும்
கண்டங்களையும் தாண்டி
வெடித்தது
பிரித்தது
மனிதனொருவனை எம்மிடையிருந்து.

இரண்டு வெள்ளிக்காசுக்கு சனங்களின் கரையை விற்றவர்கள்!

-தமயந்தி- (16.07.2014)



ர்முனையிலுள்ள அந்த முதுபெரும் ஒற்றைப் புளியமரம்
எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டே இருக்கிறது மவுனமாக.

ஒப்பாட்டன் கரையில் கதியாலாய் நட்டுவைத்துப்போன
பருத்த பூவரசின் நீங்கள் தறித்ததுபோக மீதியான வேர்க்கால்கள்
இன்னமும் மண்ணடியில் ஈரலித்துக் கிடக்கிறது கோபத்தோடு

ஆயிரங்கால்

-தமயந்தி- (13.07.2014)



பச்சைத் தண்ணீர் பற்றிய எனது கவிதையை
எல்லா இதழ்களும் நிராகரித்திருந்தன
ஒரு வாழாவெட்டியனைப்போல் பலகாலமாக
கவிதை
வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடந்தது.
என்னை பார்க்க வந்தவர்கள்
கவிதையைப் பார்த்துவிட்டுச் சொன்னதென்னவெனில்
நல்ல சட்டை போட்டனுப்பவில்லை நான் என்று.

செய்திகள் வாசிப்பது....

தமயந்தி- (09-07-2014)

புல்லம்பாயில் உறங்கிக் கொண்டிருந்தது நிலவு. 
விடிவதற்கு சற்று முன்னதாக 
ஈராட்டியின் மவுனத்தைக் குலைத்துப்போட்டு 
எழுந்து வந்த காற்று 
யன்னலை உடைத்து உட் புகுந்தது. 

கட்டியம் -கரவை தாசன்-

("ஏகலைவன்" தென்மோடி கூத்துப் பிரதிக்காக கவிஞர் கரவை தாசன் வழங்கியுள்ள கட்டியம்!) 


தமிழ்ச் சூழலில் ஆவணப் படுத்துதல் என்பது அருகியே வந்திருக்கின்றது. ஆயினும் கூத்துப் பற்றி தமிழ்நாட்டில் 11ம் நூற்றாண்டில் ராஜ ராஜ சோழனின் வரலாற்றினை நாடகமாக மேடையேற்றம் செய்ததாக கல்வெட்டுக்கள் உள்ளன. ஆனால் 18ம் நூற்றாட்டின் கூற்றுகளிலேயே சங்கரதாஸ் சுவாமிகள் புராணக் கதைகளை நாடகப் பிரதியாக்கம் செய்தாரென்றும் 19ம் நூற்றாட்டின் கூற்றுகளில் அன்று நீதிபதியாக இருந்த காசி விஸ்வநாதன் அவர்கள் "தம்பாச்சாரி விலாசம்" "கையூடு தாசில்தார் விலாசம்" போன்ற நாடகங்களை பிரதியாக்கம் செய்தார் என்றும் காணக்கிடைக்கின்றன. இப்படியாக நாடகப் பிரதியாக்கத்திற்கு ஒரு வரலாற்றுப் போக்கிருக்கின்றது. இருப்பினும் நாடகப்பிரதிகள் தமிழில் மிகவும் ஒறுப்பாகவே இருக்கின்ற நிலையிலே, நாடகப் பிரதியினை அச்சாக்கம் செய்வதன் அவசியம் கருதி, தமயந்தியின் "ஏகலைவன்" தென் மோடிக் கூத்துப்  பிரதியினை அச்சாக்கம் செய்வதென்பது மிகவும் ஆரோக்கியமான செயல் நெறியே. 

செவ்வாய், 8 ஜூலை, 2014

எல்லோரும் ஏகலைவர் தாமோ?!

கலாநிதி சி.ஜெயசங்கர் 
நுண்கலைத்துறை கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை. 

ஏகலைவன் தொன்மோடிக் கூத்துப் பிரதிக்கு வழங்கிய முன்னுரை. 

வெளியியீடு: உயிர்மெய் &
மெலிஞ்சிமுனை கலைக்குரிசில் கலாமன்றம் சர்வதேச ஒன்றியம் 

னது சிறுபராயத்தில் ஏகலைவன் எனக்கு அறிமுகமாகின்றான். அந்த அறிமுகம் எனக்கு துயரத்தைத் தந்தது. அத்துடன் தர்மம், அதர்மம் பற்றிய வகுப்பறைக் கற்பித்தல்கள், கதாப்பிரசங்கிகளின் கதையாடல்கள், நியாயப் படுத்தல்கள் எல்லாவற்றிலும் சந்தேகம் இழையோடத் தொடங்கிவிட்டிருந்தது.

ஞாயிறு, 6 ஜூலை, 2014

இறுதியாக ஒரேயொரு கவிதை -தமயந்தி- (2005)

எனக்குள் புதைந்து போன,
உங்களுக்குள் விதைக்கமுடியாத
எனது
கவிதைகளுக்கு அஞ்சலியாகவும்,
ஒரு
முடிவுரைக்காகவும்
இறுதியாக ஒரேயொரு கவிதை

சனி, 5 ஜூலை, 2014

நான் +நீ =வழிப்போக்கு

-தமயந்தி- 25 -11- 2012 



தூரம் நெடியது
சுமையும் அதிகம்

மீட்பு

-தமயந்தி- (15.12.1993)




புயல் துரத்த
புயலோடு
அள்ளுண்டோடி வரும்
புழுதிப் படை துரத்த
கடல் துரத்த
கருமூஞ்சி
கொப்பழித்தித்துப் புரளும்
முகில் துரத்த
இருள் துரத்த
இருட்டாள்கையில்
விழிகள் தணல் சீற
ஆந்தை துரத்த
வனம் துரத்த
வளமாய்க் குடல் தின்ன
வனவஞ்சக
நரி துரத்த
பேய் துரத்த
பேய்க்குப் பலிதேடி
பேயாய் அலையும்
பேயின் புதல்வர் துரத்த

உலக்கையன்- தமயந்தி

21-01-2013 

செத்துப்போன எனது ஆச்சி அன்னம்மா ஒரு தீர்க்கதரிசிதான்.
அவள் சொல்லிவிட்டுப்போன ஏகப்பட்ட சங்கதிகள் நடந்தேறியிருக்கின்றன.
காகம் இருக்கப் பனம்பழம் விழுந்த கதைபோல்தான் என்று எத்தனை சங்கதிகளுக்குத்தான் சமாதானம் சொல்ல முடியும்.
மோட்டுச் சாஸ்திரங்கள் போலவோ அல்லது ஐதீகப் பம்மாத்துப்போலவோ, அல்லது குருட்டு விசுவாசத்தைப் போலவோ இல்லை இது. அவைகள் வேறு. இது வேறு.

தீர்க்கதரிசனம் வேறுதான். அறிவோடு ஆய்வோடு தொடர்புடையது. பகுத்தறிவோடு சம்பந்தமுடையது.

என்னை அவள் செல்லமாய் அழைப்பது உலக்கையன் என்றுதான்.

படம் புடிக்கிறவனாகத்தானடா நீ வருவாய் என்றாள். வந்தேன்.
கதப்பொஸ்தகம் எழுதுவாய் என்றாள். எழுதுகிறேன்.
கடலோடி விண்ணன் என்றாள். அதிகமாகவே.
கூத்துக்காறன் என்றாள். ஆகினேன்.
ஏமாந்த சோணகிரி என்றாள். அப்படியே.
இப்படி ஏகப்பட்டது....

கைவிளக்குக் கிராமம்

-தமயந்தி- (28.01.2013) 



அதிகாலைக்கு சற்று முன்னதாக கண் விழித்தபோது
கால்மாட்டில் வந்தமர்ந்திருந்தது
கை விளக்கில் காலமெலாம்
இருட்டை விரட்டிய எனது கிராமம்.

குருடாக்கப்பட்ட விளக்கொன்று பேசுகிறது

தமயந்தி  -2007-





உலகம் தன்பாட்டில்
மும்முரமாய் இயங்கிக்கொண்டிருந்தது
வானத்திடலில் கறுப்பும் வெள்ளையுமாய்
காதலோடு முத்தங்களை
கலந்துகொண்டிருந்தன முகில்கள்

ஓவியனாகி, பின் எதுவாகி...?

தமயந்தி  -2007-



 நான் ஓவியனல்ல.
ஒரு மனித உருவத்தைக்கூட
மூக்கு வாய் கண்ணென்று
ஒழுங்காக வரைந்தறியேன்.


என் காதலி

-தமயந்தி- (2006)



1.
அவன் புதைந்து கிடந்தான்.
புதிதாய் முளைத்த பச்சைச் சமாதி ஒன்றின் வடிவமாய்
கடதாசிப் பட்டாளம் அவனை மூடிக்கிடந்தது.
அவனதற்குள் புதைந்து கிடந்தான்.

பரிசுத்த ஆவி பசியோடு தப்பிப்போன வழி

-தமயந்தி- (நன்றி: குவர்னிகா-2013) 



வானத்தின் ஏழாவது அடுக்கின்மேலே
அவள் உதறிக் காயப்போட்ட கவிதைக்கும்
பூமியின்
ஏழாவது அடுக்கின் கீழே வெகு நாட்களுக்குமுன்
நான் புதைத்துவைத்திருந்த கவிதைக்கும்
அந்தரப் பரப்பில்
புணர்ச்சி நடந்துமுடிந்த ஏழாவது நிமிடத்தில்
வானத்தினுச்சியிலிருந்து ஒலித்த
அசரீரியின் குரலின் மீதேறி
பசியோடு இறங்கி வந்த புறாவானவர்
நீரின்மீது மடமடவென நடந்தார்
ஒரு சுடுகாரல்கூடக் கிடைக்கவில்லை
ஈரத்தெரு முழுவதுமாக நடந்துபார்த்தார்
ஒருசிறு ரொட்டித்துண்டுதானுங் கிடைக்கவில்லை

28 வருடங்களின் பின்

28 வருடங்களின் பின் கைக்கெட்டிய எனது கவிதைகள்
(இரண்டாவது கவிதைத்தொகுப்பு "உரத்த இரவுகள்" - 1986) 


அன்னையிடமிருந்து...! (1985)


ஊர்க்கோடி
கிழட்டு ஆலமரத்து இலைகளெல்லாம்
பழுத்து விட்டன

பூச்சிக்குப் பயந்த கவிஞன்

 -தமயந்தி- (26.12.2013)



உப்புக்காற்றின் தழுவலில் கண்ணா மரக்கிளையில் இரவிரவாய் தூங்கி, வெள்ளாப்பில் விழித்த கவிதை சிறகெடுத்துப் பறந்தது. அதன் சிறகிடுக்கில் தூங்கி வழிந்துகொண்டிருந்த கவிஞர்கள் ஐந்து பத்தாய்க் கொண்டுண்டனர். குய்யோ முறையோவென தரையில் விழுந்த கவிஞர்கள் குளறிய சத்தத்தில் கரை நீளம் தூங்கிக்கொண்டிருந்த நூற்றுக் கணக்கான கவிதைகளும் எழுந்து பறக்கத் துவங்கின. அவற்றின் சிறகிடுக்குகளிலிருந்து இன்னும் ஆயிரக் கணக்கான கவிஞர்கள் கொட்டுண்டு கரை நீளம் சிந்திச் சிதறிக் கிடந்தனர். 



தவம்

-தமயந்தி- (7.06.2014 )



மேகத்தின் மேடையிலிருந்து
குதித்து இறங்கினாள்
அவள் நடந்துசென்ற வழி நெடுக
நீர்த்துளிகள் உதிர்ந்து
உதடுகள் நிறைந்த வார்த்தைகளை காத்தபடி
மெளனித்துக் கிடந்தன.


சூரியனைத் தின்றவர்கள்

-தமயந்தி- (1988)




சூரியனைப் பிய்த்து
தம் சீடர்களுக்கு அதை அளித்து
அவர் கூறியதாவது:
அனைவரும்
இதனை வாங்கித் தின்னுங்கள்
இது
உங்களுக்காக கையளிக்கப்படும்
என் அதிகாரங்கள்
இதனை உட்கொள்ளும் நிமித்தம்,
ஒளியின் மீதான ஆட்சியையும்
இருளின் மீதான ஆதிக்கத்தையும்
நீங்கள் அடைகிறீர்கள்

குருவிச்சை

 -தமயந்தி- (25.06.2014)


எங்கெங்கோ குந்தியிருந்துவிட்டு 
கடைசியாக 
எனது பசுமரக்கிளையில் வந்து 
சிறகாற்றிய காகமிட்ட எச்சம். 
அதற்குள்ளிருந்து 
மரத்தடியில் முளை விட்டதுதான் 
இந்தக் குருவிச்சை. 

சுடலைக் குருவிகள்

-தமயந்தி. (24.06.2014)



செக்கல் பட்ட நேரம்.
மேற்கில்
செவ்வானம் நிறம் மங்கி
உடலில்
கருமையை அப்பிக்கொண்டிருந்தது
மெல்ல எழுந்து
தெற்கு நோக்கி நடக்கிறேன்
அங்கேதான் எனது துறைமுகம்.
என் பாட்டனும் அப்பனும்
எனக்காக விரித்துவைத்த துறைமுகம்.
அழகான, மிகமிக அழகான கரை அது.

காணாமல்ப் போனவர்

 -தமயந்தி- (07.06.2014)


யாரைத் தேடுகிறாய்? 
நான் யேசுவைத் தேடுகிறேன். 
எனக்கு நடை பழக்கிய யேசுவைத் தேடுகிறேன். 
கள்ள முதலாளிகளை சாட்டையால் சவட்டிய 
அந்த மனிதரைத் தேடுகிறேன். 
  
ஏதற்கு? 

திருக்காயங்கள்

 -தமயந்தி. (06.06.2014)


பூமியில் ஊர்ந்து திரிந்த அவர்கள்
நீருக்குள் சென்று மறைந்துகொண்டார்கள்.
மிருகங்களும் நீருக்குள் மறைந்திருந்தன
மிருகங்களும் அவர்களும்
நீருக்குள் கைகள் குலுக்கிக்கொண்டபோது
நீர் கொழுந்துவிட்டெரிந்தது

வெள்ளி, 4 ஜூலை, 2014

விழிகள் நோகப் பார்த்திருக்கும் விதி!

-தமயந்தி-  (6.06. 2014)



மடி நிறையக் கனவுகளை 
வியர்வையில் குழைத்து வர்ணங்களாக்கி
ககன வெளியையும் கடற் பரப்பையும் 
பரந்து விரிந்த வாழ்வையும் தீட்டி முடிகையில் 
கப்பலெடுத்து வருகிறார்கள் களவு கொண்டுபோக 

திருடப் படுகிறது காற்றுவெளி

 -தமயந்தி- (05.06.2014)


திறந்த விழிகள் திறந்தபடியே கிடக்க
எங்கள் கடலும், கரையுமென
களவாடப் படுகிறது.

கைவிடப்பட்ட பாடலின் சுவை என்ன?

 -தமயந்தி- (05.06.2014)


கட்டிடப் புயலடித்த நகரங்களைத் தேடி
எல்லா மனிதர்களும்
குடியேறிப் போனதன் பின்னால்
எனக்குத் தெரிந்த அவளொருத்தியும்
தலைமறைவாகியிருந்தாள்.
தனித்து விடப்பட்ட
பனிக்காட்டிடையில்
வளைந்து வளைந்து
சலசலத்தோடும் சிற்றோடையில்
அவளது பாடல்கள் மட்டும்
நீச்சலடித்துக் கொண்டிருந்தன.

கலங்கள் வந்து காட்டும் திசையென

 -தமயந்தி- 5.06.2014)


கலங்கரை விளக்கை
கலங்கடித்துக் கொண்டிருந்தது
பெரும்புயற்காற்றும், பேய்மழையும்.
புயலோயும், மழை சாயும்,
வான் மீளும், திசை காணும் என
காத்திருந்து காத்திருந்து
கலங்கரை விளக்கின் கண்கள்
செத்துக்கொண்டிருந்தன.

அந்தோனிகளுடன் நங்கூரமிட்டுள்ளான்

 -தமயந்தி-



(படத்தகவல்:
1985ம் ஆண்டு நெடுந்தீவுக்கும் கச்சத்தீவுக்கும் இடையில் இலங்கைக் கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்டு, தீவகக் கடற்பரப்புக்குள் எமது மக்களால் மீட்டெடுக்கப்பட்ட 9தமிழக மீனவர்களின் உடல்களை வேலணை தெற்குத் துறைமுகத்தில் அடக்கம் செய்து, கொல்லப்பட்டவர்களின் பெயராலேயே தீவக மீனவமக்களால் கட்டப்பட்ட நினைவுக் கல். 

வியாழன், 3 ஜூலை, 2014

புளியநிழல்

 -தமயந்தி- 22. 08. 2013



மண்புழுக்கள் உறிஞ்சிக் குடித்ததுபோக 
மண்டி வடித்த மீதிக் கலங்கல் நீரால் 
நிறைந்திருந்தது அவளது இடையின் மண்குடம். 

10 கவிதைகள்

-தமயந்தி- (29 09., 2013 )



மிக அழகாக வடிவமைக்கப்பட்டதான 
அவளது புத்தகம். 

 கனவுகளாலான அவளது புத்தகத்தை 
படித்து முடித்தபோது 
வண்ண மலர்களும் வண்ணத்துப் பூச்சிகளும் 
வட்டமடித்துப் பறந்து கொண்டிருந்தன. 

மீள வேண்டும்! (1988)

 -தமயந்தி-


இரையும் கடலின் அலையும் கரையும்
கரையில் ஈரக் கரும்பாறைகளும்
பாறை காக்கும் ஒற்றைக் கொக்கும்
கொக்கின் பிடியில் தப்பும் மீனும்
மீன்கள் நிரப்பி அசையும் படகும்
படகில் கேட்கும் அம்பாக் குரலும்
குரலும் வானை உரசும் கூத்தும்
கூத்து முடிந்த கொட்டகைத் தரையும்

அழிக்கப்பட முடியா தேசம்

 -தமயந்தி - 
சிறுவயதுக் கரையோரம்
கட்டிய மணல் வீட்டை அலை
வந்து வந்து அழித்துப் போனது.
மீண்டும் மீண்டும்
கட்டக் கட்ட
அழித்தல் சாத்தியமாயிற்று அலைக்கு