வெள்ளி, 4 ஜூலை, 2014

விழிகள் நோகப் பார்த்திருக்கும் விதி!

-தமயந்தி-  (6.06. 2014)



மடி நிறையக் கனவுகளை 
வியர்வையில் குழைத்து வர்ணங்களாக்கி
ககன வெளியையும் கடற் பரப்பையும் 
பரந்து விரிந்த வாழ்வையும் தீட்டி முடிகையில் 
கப்பலெடுத்து வருகிறார்கள் களவு கொண்டுபோக 

கண்ணிறைந்த சூரிய சந்திரரை,
கச இருட்டிலும் நடுக்கடலில் 
திசைகள் சொன்ன நட்சத்திரங்களும் 
"ஊரான் வீட்டு ஈச்சை மரமே 
என் வீட்டு உமலை நிறை" என்பதாக 
ஆய்ந்து மடியில் கட்டப் படுகிறது. 

பஞ்சத்துச் சனங்கள் என்ன செய்யும்? 
பட்டினத்து ராசாக்கள் படைகொடியோடு வந்து 
பாரளந்து கோட்டை கட்ட 
விழி நோகப் பார்த்திருக்கும். வேறென்ன செய்யும்? 

பட்டத்து மகராணி பாறி விழுந்தாலாம்
பஞ்சத்து மன்னரெல்லாம் பல்லிழிச்சுப் பார்ப்பினமாம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக