சனி, 5 ஜூலை, 2014

நான் +நீ =வழிப்போக்கு

-தமயந்தி- 25 -11- 2012 



தூரம் நெடியது
சுமையும் அதிகம்


உனது
நீண்டநெடும் பயணத்தின் வழியில்
நாம் சந்தித்தோம்
காதல்(?) கொண்டோம்
தூரம் சுருங்கி
சுமை குறைந்ததென்றாய்

என்னை நீ
முத்தமிட்டு விலகி
பிரமித்து நின்றாய்
தரமுயர்ந்த பழரசத்தின்
சுவை தெரிந்ததென்றாய்

உனது
வார்த்தைகள் தந்த பூரிப்பில்
என்னை
முழுவதுமாக பருகத்தந்தேன்

மீண்டும் விலகிச்சென்றாய்
கொஞ்சம் தூரமாகவே

இப்போதுதான் உணர்ந்தேன்
உன்னால்
பாவித்தெறியப்பட்ட
மதுக்கோப்பைதான் நானென்பதை

(இதை இப்படி முடித்திருக்கலாமோ:
"ஆயினும்
உனது உதடுகளுடனான
உறவின் சுவையை
எனது சர்வாங்கமும் விரவவிட்டபடி
எனதான பயணப் பொதிகளுடன் நான்")

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக